Thiruvanmiyur Nagarathar Sangam
Home About us Activities Photo Gallery Video Gallery News&Events Membership Books Contact us
HISTORY
HOME > ABOUT US > HISTORY
தோற்றமும் வளர்ச்சியும்
திருவான்மியூரில் ஒரு நகரத்தார் சங்கம் தொடங்கவேண்டும் என்று அப்போது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலரும் ஒன்று சேர்ந்து கூடிப்பேசி முடிவெடுத்து அகில இந்திய வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த, மயிலாப்பூரில் இருந்த திரு.ஜெயம்கொண்டான் அவர்களை தலைவராக இருக்கும்படி கேட்டுக்கொள்ள அவரும் ஓரிரு மாதங்களில் திருவான்மியூருக்கே வர இருப்பதைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொண்டார்.

இவர்களுடன் தொழிலில் ஈடுபட்டும்,வேறுசில நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டும் இருந்த சிலரும் சேர்ந்து மொத்தம் 66 உறுப்பினர்களுடன் தொடங்கப்பெற்றது, இந்த ''நகரத்தார் மன்றம் -திருவான்மியூர்''. அன்றைக்கு அந்த உறுப்பினர்கள் அனைவருமே நடுத்தர வருவாயில் உள்ளவர்கள்தான் என்றாலும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள். முதலாம் ஆண்டு நிறைவு விழாவில், 81 உறுப்பினர்களாகவும் வெள்ளி விழாவின் போது 250 உறுப்பினர்களாகவும் தற்போது 310 உறுப்பினர்களாகவும் வளர்ச்சிகண்டு சிறப்புற நடைபெற்று வருகிறது இம்மன்றம்.

தொடக்ககால நிர்வாகக்குழுவினர்
தலைவர்
K.ஜெயம்கொண்டான்
மேலைச்சிவபுரி
துணைத்தலைவர்
உலகப்ப செட்டியார்
கண்டரமாணிக்கம்
செயலர்
V.சேதுராமன்
புதுவயல்
இணைச்செயலர்
P.C.T.P.சிதம்பரம்
கடியாபட்டி
பொருளாளர் (1ஆண்டுLமட்டும்)
C.இராமநாதன்
அரிமளம்
பொருளாளர்
KR.சிதம்பரம்
கோட்டையூர்
 
  அன்றைய செயற்குழுவினர்
  வேகுப்பட்டி P.R.வீரப்ப செட்டியார்
  பொன்.புதுப்பட்டி A.இலக்குமணன்
  நெற்குப்பை T.சுந்தரம்
  பூலாங்குரிச்சி K.சங்கரலிங்கம்
  சண்முகநாதபுரம் M.சம்பந்தம்
  சண்முகநாதபுரம் M.திருநாவுக்கரசு ஆகியோர்
தொடக்க காலம் முதலே, ஆன்மிக சமுதாயப்பணிகளில் தொய்வின்றி தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது இம்மன்றம். ஆன்மிகப்பணிகளுக்கு மன்றத்திற்கு ஆதாரமாக இருப்பது பாடல் பெற்ற தலமான திருவான்மியூர் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில். கார்த்திகை விழா, பிள்ளையார்நோன்பு, மகர்நோன்பு, ப்ரம்மோற்சவத்தில் ஒருநாள் உபயம், தண்ணீர்ப்பந்தல், திருப்போரூர் பாதயாத்திரை, ஏகதின கந்தசஷ்டிலட்சார்ச்சனை, சூரசம்ஹாரம் போன்ற ஆன்மிகவிழாக்களும், ஒருநாள், மூன்று நாள் சுற்றுலாக்கள், விளையாட்டுவிழா, கல்வி, திருமண நிதிஉதவி போன்ற சமூக சமுதாயப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இம்மன்றம்.

மன்றத்தின் மாதர் பிரிவு ஒன்றும் தொடக்க காலத்தில்இருந்தே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அவர்களும் மாதம் ஒரு முறை கூடிப்பேசி சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறார்கள்.

திருவான்மியூரிலும் கந்தசஷ்டி, சூரசம்ஹாரவிழா நடத்தவேண்டும் என்று எண்ணி,அதற்காக உறுப்பினர்கள் மற்றும் நல்ல உள்ளங்களின் உதவியோடு, சுமார் 1 1/2 இலட்சம் ரூபாய் செலவில், சூரன் பொம்மை, சுப்பிரமண்யர் ரதம் ஆகியவற்றைச் செய்து வெள்ளோட்டமும்விட்டு விழாவையும், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் முகவரிக் கையேடு ஒன்றை 2009 பிள்ளையார்நோன்பு விழாவிலேயே வெளியிட்டது இம்மன்றம்.
தனிஏடாக இல்லாமல்,முதலாம் ஆண்டுவிழா மலரிலேயே 1987லேயே 81 உறுப்பினர்களின் பெயர் முகவரி கோயில் ஆகியவற்றை வெளியிட்டு,அந்தவகையில்,இன்றைய பல சங்கங்களின் முகவரிக்கையேடுகளின் முன்னோடி திருவான்மியூர் நகரத்தார் மன்றம்தான் என்பது மன்றத்திற்குப் பெருமைசேர்க்கும் தகவல்.
வெள்ளிவிழா
2011 ஜனவரி 26ல், சென்னை இராணிசீதை மன்றத்தில், மன்றத்தின் வெள்ளிவிழாசீரும் சிறப்புமாக நடைபெற்றது.

2016 ஜனவரி 31ம் தேதி, மயிலாப்பூர், வித்யாபாரதி திருமண மண்டபத்தில், மன்றத்தின் 30ம் ஆண்டுவிழா மிகச்சிறப்பாகநடைபெற்றது. இவ்விழாவில், 30ம் ஆண்டுவிழா மலர், உறுப்பினர்கள் முகவரிக்கையேடு-2016 பட்டினத்தாரின் அற்புதங்களும் வரலாறும் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

 
Go to top click here